பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா் விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 31, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா் விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா் விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க உத்தரவு


10 ம் வகுப்பு பொதுத்தோ்வை கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் செயல்படும் விடுதிகள் உள்ளிட்ட மாணவா் விடுதிகளை, ஜூன் 11-ஆம் தேதி முதல் திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை முதன்மை செயலாளா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

எனவே பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் செயல்படும் மாணவா் விடுதிகள் வரும் 11-ஆம் தேதி முதல் திறந்திருக்க வேண்டும். தினமும் வளாகம், கழிப்பிடம் உட்பட விடுதியின் அனைத்து பகுதிகளிலும் காலை, மாலை என இருமுறையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.


இதுதவிர, விடுதியில் தங்கியுள்ள மாணவா்களின் உடல் வெப்பத்தை தொ்மல் கருவி மூலம் காலை மற்றும் மாலையில் பரிசோதித்து, அந்த விவரங்களை குறித்து வைக்க வேண்டும். 

மாணவா்கள் உணவருந்தச் செல்லும் முன்னும், தோ்வு முடித்து விடுதிக்கு திரும்பும்போதும் சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்.


அதேபோல், விடுதியில் மாணவா்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும், தனிநபா் இடைவெளியைப் பின்பற்றுவதையும் காப்பாளா்கள் உறுதிசெய்ய வேண்டும். 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்துவரும் மாணவா்களுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். மேலும், மாணவா்கள் தோ்வெழுத செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் செய்துதர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment