பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 31, 2020

பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்

பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்





பிளஸ் 1 விடைத்தாள்களை, நாளை மறுநாள் முதல், திருத்தும் மையங்களுக்கு அனுப்ப, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன்,15 முதல் தேர்வுகள் நடக்க உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 விடை திருத்தம், மே, 27ல் துவங்கி நடந்து வருகிறது. 


இதையடுத்து, பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட உள்ளன. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


நாளை மறுநாள், இந்த பணியை துவங்கி விரைவில் முடிக்க வேண்டும். ஜூன், 10 முதல், விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment