பருவத் தேர்வுக்கான மாணவர்கள் விவரங்களை மே 22-க்குள் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

பருவத் தேர்வுக்கான மாணவர்கள் விவரங்களை மே 22-க்குள் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகம்

பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று  கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் பருவத் தேர்வுக்காக தங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.


 அதன்படி, 2020-ஆம் கல்வியாண்டில் ஏப்ரல்}மே மாதங்களில் நடங்கும் பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மார்ச் 22-ஆம்  தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்திருந்தது.


இதற்கிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் 16-ஆம் தேதி முதலே கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களின் விவரங்களை கல்லூரிகளால் உரிய தேதிக்குள் சமர்ப்பிக்க முடியவில்லை.


இந்நிலையில், கல்லூரிகளை மீண்டும் திறந்து தேர்வுகளை நடத்த தமிழக உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி, மாணவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment