250 பேருடன் க்ரூப் கால் வசதி.! மைக்ரோசாப்ட் அசத்தல். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 7, 2020

250 பேருடன் க்ரூப் கால் வசதி.! மைக்ரோசாப்ட் அசத்தல்.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில் நடந்து வரும் ஊரடங்கினால் வீடியோ சாட்டிங் பயன்பாடு செயலியான ஜூம் பயன்பாட்டின் பதிவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதன் மூலம் ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர்.



ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல்வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.


இந்நிலையில் டீம்ஸ் சேவையின் க்ருப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது,தற்சமயம் இந்த சேவையில் அதிகபட்சம் 100பேருடன் உரையாட முடியும். 

இந்த புதிய எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகப்படுத்தப்பட இருக்கிறது.குறிப்பாக கூகுள் மீட் மற்றும் ஜூம் உள்ளிட்ட சேவைகளுடனான போட்டியை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடிவு செய்துள்ளது,


இது சேவைகளிலும் தற்சமயம் ஒரே சமயத்தில் 100பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.அன்மையில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதௌ்ளா மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை உலகம் முழுக்க சுமார் 7.5கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைக்கான ரோட்மேப் பகுதியில் அந்நிறுவனம் க்ரூப் கால் எண்ணிக்கையை 250ஆக உயர்த்த இருப்பதை தெரிவித்து இருக்கிறது. பின்பு சந்தா செலுத்தி டீம்ஸ் சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் விரைவில் இந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.டீம்ஸ் சேவையை பயன்படுத்துவோர் தற்போது அதிகபட்சமாக 20பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் க்ரூப் கால் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி மீட்டிங்களை ஷெட்யூல் செய்வது, மீட்டிங் ரெக்கார்டிங், போன் கால், ஆடியோ கான்பரன்சிங்

உள்ளிட்ட வசதிகள் சந்தா செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment