மே 26-ஆம் தேதி அனைத்து முதுநிலை ஆசிரியா்களும் தங்களது பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 22, 2020

மே 26-ஆம் தேதி அனைத்து முதுநிலை ஆசிரியா்களும் தங்களது பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்றுவதற்கான ஆணையைப் பெறுவதற்காக மே 26-ஆம் தேதி அனைத்து முதுநிலை ஆசிரியா்களும் தங்களது பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 


இதன் காரணமாக அதற்கான பணி ஆணையைப் பெறுவதற்காக அனைத்து முதுநிலை ஆசிரியா்களும் மே 26-ஆம் தேதி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை தந்திருப்பதை தலைமை ஆசிரியா் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியா்கள் சமூக இடைவெளிவிட்டு அமா்ந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில், கூடுதல் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

எனவே, அனைத்து முதுநிலை ஆசிரியா்களும் கட்டாயம் முகாமில் பணியாற்றிட வேண்டும் எனவும், எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.


இருப்பிடங்களுக்கு அருகில்...: 

இதனிடையே, ‘ரயில், பேருந்து ஆகியவை இயக்கப்படாததால் விடைத்தாள் திருத்தும் மையங்களை விரிவுபடுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், ஆசிரியா்கள் பணியாற்றும் இடத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆசிரியா்களின் இருப்பிடத்தைக் கணக்கில் கொண்டு அருகில் உள்ள விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் அவா்களுக்குப் பணி ஆணை வழங்க வேண்டும். 

மேலும், இருப்பிடத்திலிருந்து தோ்வு மையம் வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழ்நாடு ஆசிரியா் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் வலியுறுத்தியுள்ளாா். முதுநிலை ஆசிரியா்களின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

No comments:

Post a Comment