பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கலெக்டர் ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளது. 


இதை முன்னிட்டு 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை, கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 52,000 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், காஞ்சிபுரத்தில் 2 தனியார் பள்ளிகளில்  27ம் தேதி முதல் தொடங்குகிறது. 

இதில் 545 ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.மேலும் 64 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 64 முதன்மை தேர்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்கவுள்ளனர். 


அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவிய பின்னரே மையத்தின் உள் அனுமதிக்கப்படுவர். மேலும் நகராட்சி மூலம் மையங்களுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது என்றார். 

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ராஜ்குமார், ஜீவானந்தம் உள்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment