சிவப்பு மண்டலம் இல்லாத பகுதிகளில், கூடுதல் மையங்கள் அமைத்து, பிளஸ் 2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்' என, கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது.
அனைத்து தேர்வுகளும் நிறைவடையும் முன்பே, கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு தொடங்கியது. இதனால், கடந்த மார்ச், 24ல் நடந்த கடைசி தேர்வில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க முடியவில்லை.
ஒரு மாதத்துக்கு மேலாகியுள்ள நிலையில், ஊரடங்கின் காரணமாக, இன்னும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் துவங்கப்படவில்லை. இதை நடத்துவது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களிடம் தேர்வுத்துறை கருத்து கேட்டிருந்தது
இதில், கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பீட்டு பணிகளையும் உரிய வழிமுறைகளை பின்பற்றி, நடத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வின் மதிப்பெண், அடுத்த உயர்கல்வியில் சேர்வதற்கு மிக முக்கியமான ஒன்று. கொரோனா கட்டுப்பாடுகள் இந்தாண்டு முழுவதும் தொடர வாய்ப்புள்ள நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை தள்ளி வைத்துக்கொண்டே செல்வது, மாணவர்களை சிக்கலுக்குள்ளாக்கும்.
தற்போது ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில், கூடுதலாக விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை அமைத்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டுகளில், ஒரு வகுப்பறையில், 24 ஆசிரியர்கள் வரை மதிப்பீடு செய்வது வழக்கம். இதை ஒரு வகுப்பறைக்கு எட்டு ஆசிரியர்கள் வீதம், கூடுதல் வகுப்பறை, தேர்வு மையம் ஒதுக்கி, கிருமி நாசினி, சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்றி மேற்கொள்ள முடியும்.
உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில், ஆயிரத்துக்கும் மேல் மக்கள் குவிந்த போதும், இந்த வழிமுறைகள் நோய் பரவாமல் தடுக்க உதவியுள்ளது. மேலும், போக்குவரத்து இல்லாத நிலையில், பள்ளி வாகனங்களை ஏற்பாடு செய்து, ஆசிரியர்களை மதிப்பீட்டு மையங்களுக்கு அழைத்து செல்ல முடியும்.
இதற்கான அனைத்து யோசனைகளையும், தேர்வுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியளிக்கும் பட்சத்தில், இப்பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்
. விடைத்தாள் மதிப்பீடு, தேர்வு முடிவு வெளியீடு தாமதமானால், உயர்கல்வி பாதிக்கப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, உரிய முன்னெச்சரிக்கையுடன் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். -

No comments:
Post a Comment