பள்ளிகள் திறக்கும் நாள் :ஆந்திரா முதலமைச்சர் வெளியிட்ட செய்தி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 19, 2020

பள்ளிகள் திறக்கும் நாள் :ஆந்திரா முதலமைச்சர் வெளியிட்ட செய்தி

ஆந்திரப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. மேலும் அந்தந்த மாநிலங்கள் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


மேலும், ஆந்திரத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுக்  கூடங்கள் ஆகியவற்றைத் திறக்க தடை தொடரும் என்றும் கரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பொதுப் போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment