கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 2, 2020

கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப்பணியில் தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தடுப்பு பணியில் 50 வயதிற்கு உட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கரோனா தடுப்பு பணியில் மருத்துவம் அல்லாத தன்னார்வ பணிகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் ஆர்வமிருந்தால் பங்கேற்கலாம்.


எடுத்துக்காட்டாக ரேஷன் பொருள்கள் முறையாக வருகிறதா என்பதை கண்காணிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற மருத்துவம் அல்லாத சேவைகளுக்கு விருப்பமுள்ள, 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அணுகினால் அவர்கள் கரோனா தடுப்பு பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. I'm private school staff and pudhucherry state.... But iam interested...how it is possible

    ReplyDelete
  2. I'm private school staff and pudhucherry state.... But iam interested...how it is possible

    ReplyDelete
  3. I'm private school staff and pudhucherry state.... But iam interested...how it is possible

    ReplyDelete
  4. I'm private school staff and pudhucherry state.... But iam interested...how it is possible

    ReplyDelete