50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ஏர்டெல் சலுகை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 20, 2020

50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ஏர்டெல் சலுகை

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை வேலிடிட்டி இன்றி வழங்கப்பட்டுள்ளது.இதனால் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகை வேலிடிட்டி பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகையுடன் ஏர்டெல் ரூ. 98 விலை சலுகையையும் மாற்றியமைத்து இருக்கிறது.


ஏர்டெல் ரூ. 251 விலை சலுகையில் 50 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டா எந்த வேலிடிட்டியும் இன்றி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை 50 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோன்று ஏர்டெல் ரூ. 98 சலுகையின் வேலிடிட்டி 98 நாட்களில் இருந்து பேஸ் பிளான் அடிப்படையில் வழங்கப்படுகிறது


ஏர்டெல் ரூ. 98 சலுகையில் 12 ஜிபி டேட்டா  வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு சலுகைகளும் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்படுகிறது.


முன்னதாக ஏர்டெல் ரூ. 2498 விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜீ5 பிரீமியம் சந்தா, ஏர்டெல் செக்யூர் மொபைல் ஆன்டி-வைரஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment