தமிழக அரசு பள்ளிகளில் மே மாத சம்பளத்திற்காக 8 ஆண்டாக போராட்டம்: 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 23, 2020

தமிழக அரசு பள்ளிகளில் மே மாத சம்பளத்திற்காக 8 ஆண்டாக போராட்டம்: 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் மே மாத சம்பளம் வழங்கக் கோரி கடந்த 8 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் மட்டுமின்றி கூடுதலாக உடற்கல்வி ஓவியம் கணினி அறிவியல் இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல் திறன் கல்வி போன்ற திறன் வளர்க்க கடந்த 2012 ஆம் ஆண்டு எட்டு சிறப்பு பாடங்கள் உருவாக்கப்பட்டன


 அத்துடன் மாதம் 5 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர் .பல்வேறு காரணங்களால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டும் பணியில் உள்ளனர் .இவர்களுக்கு வருடத்திற்கு 11 மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுகிறது தவிர மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை

 இதனை வழங்க வலியுறுத்தி கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்டமாக பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது :

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத் தோடு கல்வி இணை செயல்பாடுகள் என கருதி சிறப்புப் பாடங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் 5 ஆயிரம் அடிப்படையில் ஓர் ஆண்டில் உள்ள அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க 99. 29 கோடி ஒதுக்கப்பட்டது .


ஆனால் பணி நியமனம் செய்ததில் இருந்து இதுவரை மே மாதம் சம்பளம் தருவதில்லை .அரசாணையில் 11 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் என்று குறிப்பிடாத போதும் கல்வித்துறை ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்து வருகிறது .

மே மாத சம்பளம் இல்லாமல் அந்த மாதம் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் நியாயமாக முடிந்துபோன 8 ஆண்டுகளுக்கும் மே மாதம் சம்பளம் கிடைத்திருக்க வேண்டும் .ஆனாலும் கல்வித்துறை தரவில்லை தொடக்கத்தில் மாதம் 5 ஆயிரமாக இருந்த தொகுப்பூதியம் தற்பொழுது 7700 அதிகரித்து வழங்கப்படுகிறது .

ஏற்கனவே ஊதிய பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில் தற்போது ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். 

எனவே மே மாதத்திற்கான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தொடர்பாக சமக்ரா சிக்சாமாநில திட்ட இயக்குனர் பள்ளி கல்வி அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் .இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்

No comments:

Post a Comment