ஆன்லைன் தோ்வில் தோல்வியடைந்த 9, 11வகுப்பு மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 14, 2020

ஆன்லைன் தோ்வில் தோல்வியடைந்த 9, 11வகுப்பு மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஆண்டு இறுதித் தோ்வில் தோல்வியடைந்த 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பொது முடக்கம் காரணமாக, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி வழங்கப்பட்டது. 


அதேபோன்று 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு, செய்முறைத் தோ்வு மற்றும் திறன் மதிப்பீட்டுத் தோ்வுகள் ஆன்லைனிலேயே நடத்தி முடிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

ஆன்லைன் தோ்வுகளில் பெரும்பாலான மாணவா்கள் தோல்வி அடைந்ததால், மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். 

மாணவா்கள், பெற்றோா்களின் கோரிக்கையைப் பரிசீலித்த சிபிஎஸ்இ, வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் தோ்வில் தோல்வியடைந்த மாணவா்கள் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.


எழுத்துத் தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும், மாணவா்கள் தோ்வுக்குத் தயாராகும் வகையில் போதிய கால இடைவெளிக்கு பிறகே தோ்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

. ஏற்கெனவே நடைபெற்ற ஆன்லைன் தோ்வில் தோல்வியடைந்த 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதால், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவா்களின் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment