டேட்டாவை இரட்டிப்பாக்கிய ஏர்டெல் நிறுவனம்! அதுவும் 98 ரூபாய்க்கு! - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 23, 2020

டேட்டாவை இரட்டிப்பாக்கிய ஏர்டெல் நிறுவனம்! அதுவும் 98 ரூபாய்க்கு!

ஏர்டெல் நிறுவனம் 98 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இதுவரை வழங்கி வந்த 6 ஜிபி டேட்டாக்கு பதில் 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோவுக்கு போட்டியாக சமீப காலமாக ஏர்டெல் நிறுவனம் பல அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கி வருகிறது


. சில நாட்களுக்கு முன் ஒரு வருட சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்நிலையில் 98 ரூபாய்க்கு வழங்கி வந்த டேட்டாவை அப்படியே இரட்டிப்பாக்கியுள்ளது.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் ஆஃபரில் டேட்டாவை மட்டும் தான் பெற முடியும்.குரல் அழைப்புகளுக்கு தனி பேக்கேஜ் தான் போட வேண்டும். 


ஜியோ நிறுவனம் 101 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது. இப்போது அதற்கு போட்டியாக ஏர்டெல் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல ஏர்டெல் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 423 ரூபாய்க்கு டாக் டைம் வழங்கி வந்த நிலையில், இப்போது அது 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment