'தமிழக அரசு விண்ணப்பித்தால் கோவையில் கேந்திரிய வித்யாலயா!' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 22, 2020

'தமிழக அரசு விண்ணப்பித்தால் கோவையில் கேந்திரிய வித்யாலயா!'

'தமிழக அரசு, உரிய முறையில் விண்ணப்பித்தால், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யான ராஜாவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் அனுப்பியுள்ள கடிதம்:

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தரும்படி, லோக்சபாவில் கோரிக்கை விடுத்தீர்கள். அதுபற்றி, ஆய்வு செய்து பதில் தரும்படி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்புக்கு உத்தரவிடப்பட்டது. 


அந்த அமைப்பு அளித்த அறிக்கையில், 'மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தரும்படி, தமிழக அரசின் சார்பில், இதுவரை, எந்த கோரிக்கையும் வரவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி அமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு, மாநில அரசே நேரடியாக, விண்ணப்பம் சமர்ப்பிக்க வழியுள்ளது. 

அனைத்து விதிமுறைகளும், முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், 'சேலஞ்ச் மெத்தேட்' வாயிலாக, இதற்கென உள்ள, செயலக தலைமையின் கீழ் செயல்படும் குழு, உடனடியாக பரிசீலனை செய்யும்.

எனவே, தமிழக அரசிடமிருந்து உரிய முறையில் கோரிக்கை வந்தால், கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், உடனடியாக, உரிய நடவடிக்கைகள் துவங்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


இதுபற்றி, ராஜா எம்.பி., கூறியதாவது: மத்திய அமைச்சரிடம் இருந்து, கடிதம் வந்திருப்பது உண்மையே. மேட்டுப்பாளையத்தில் பள்ளி அமைந்தால், கோவை மட்டுமல்லாது, அருகிலுள்ள, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். 

மத்திய அமைச்சரின் கடித நகலை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். முன்னுரிமை தந்து, விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment