தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சென்னை பள்ளி மாணவர்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 5, 2020

தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சென்னை பள்ளி மாணவர்!

என்டிஎஸ்இ எனப்படும் தேசிய அளவிலான திறனாய்வு போட்டியில் சென்னை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த நி ஷோக் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இது குறித்து பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு மமுடிவுகள்  வெளியாகின. இதில் தமிழ்நாடு அளவில் சைதன்யா பள்ளி மாணவர் இரா. நி ஷோக் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 200-க்கு 179 மதிப்பெண்கள் பெற்று சாதனை பிடித்துள்ளார்.


இதுகுறித்து மாணவர் நிஷாக் கூறுகையில் பெற்றோர்கள், பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனையும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.


மேலும் பள்ளியின் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளி தேர்வுகள் நான் மாநில அளவில் முதலிடம் எடுக்க காரணம் என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment