கல்லுாரியில் ஒன்று; ஆன்லைனில் ஒன்று - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 22, 2020

கல்லுாரியில் ஒன்று; ஆன்லைனில் ஒன்று

'கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள், 'ஆன்லைன்' வழி படிப்பில், மேலும் ஒரு பட்டம் பெறலாம்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

இது குறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், பல்கலைகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

ஊரடங்கில் வீட்டில் இருக்கும் மாணவர்களும், பட்டதாரிகளும், கூடுதல் திறனை வளர்த்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் சார்பில், ஆன்லைனில் பட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.


தொழில்நுட்ப கல்வி அல்லாத மற்ற பாடங்களுக்கு, இந்த படிப்புகளை, கல்லுாரிகளும், பல்கலைகளும் நடத்தலாம். 'ஸ்வயம்' திட்டத்தின் கீழ், இந்த ஆன்லைன் கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த கல்வி முறையை, மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்த, பல்கலைகள், கல்லுாரிகள் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், ஒரே கல்லுாரியில் படித்தபடியே, இன்னொரு படிப்பை, ஆன்லைனில் படிக்கலாம்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கல்லுாரியில், ஒரு பட்டப்படிப்பை படிக்கும் போது, அதே, காலகட்டத்தில், இன்னொரு படிப்பை படிக்க, இதுவரை அனுமதி இல்லை. இனிமேல், இந்த இரட்டை பட்டத்தை அனுமதிக்கலாம் என, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment