மத்திய நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் என்னென்ன? முழுவிபரம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 13, 2020

மத்திய நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் என்னென்ன? முழுவிபரம்

ரூ 20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள் என்ற விவரங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டுள்ளார். அதில் ; சிறப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசு ஆலோசனை நடத்தியது.

சுயசார்பு பாரதம் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியா சுயசார்புடைய தேசமாக எழுந்து நிற்க 5 தூண்கள் , பொருளாதாரம் , உள்கட்டமைப்பு , மக்கள் தொகை , அமைப்பு முறை மற்றும் தேவை என்ற 5 தூண்கள் அவசியம்.


பிபிஇ கிட்டுகள் , வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது. ஜன்தன் , ஆதார் மூலம் , பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.மின்துறை சீர்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது

நெடுஞ்சாலைத்துறை , விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் , பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6.5 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52 ,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு சேர வேண்டிய ரூ.18 ,000 கோடி தொகை உடனடியாக விடுவிப்பு.

சிறு - குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். ரூ. 3 லட்சம் கோடி கடன் திட்டம் வருகிற அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரை செயல்படுத்தப்படும். கடன் சுமையில் இருக்கும் சிறு , குறு , நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்படும்.

சிறு , குறு நிறுவனங்களின் கடனை அடைக்க வழங்கப்படும் ரூ.20,000 கோடி மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். நிதிக்குள் நிதி என்ற திட்டத்தின் கீழ் , சிறு , குறு , நடுத்தர , நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்.


சிறு , குறு , நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை மாற்றியமைப்பு. சிறு , குறு , நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம்.

ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால் , அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும். ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால் , அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.

சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் , இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது. சர்வதேச டெண்டர்களுக்கு கட்டுப்பாடு மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும்.

ரூ.200 கோடி வரையிலான அரசு துறைகளின் கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தபுள்ளி கோர வேண்டியதில்லை. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் , தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளையும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும். அடுத்த 45 நாட்களுக்கு , சிறு , குறு , நடுத்தர வர்த்தக உற்பத்தி பொருட்கள் இ- மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்.


வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு , ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான , நிறுவன பங்களிப்பு 12 % ல் இருந்து 10 % ஆக குறைப்பு. மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90, 000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும்.

ரயில்வே , சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு. ரியல் எஸ்டேட் துறையில் , கட்டுமானம் முடிந்த வீடுகள் விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு.

டிடிஎஸ் வரி பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் வரை 25 % குறைப்பு. வரி செலுத்துவோருக்கு ரூ.50.000 கோடி அளவுக்கு பலன். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கெடு , ஜீலை 31 ல் இருந்து நவம்பர் 30 வரை நீடிப்பு

No comments:

Post a Comment