வைரசை செயற்கையாக உருவாக்கினால் என்ன லாபம்? பதில் தரும் ஹாலிவுட் படம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 15, 2020

வைரசை செயற்கையாக உருவாக்கினால் என்ன லாபம்? பதில் தரும் ஹாலிவுட் படம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 3 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல 44 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாக அல்லது இயற்கையாக உருவானதா என்ற தலைப்பில் மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான செய்திகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. 


ஆனால் இதுவரை உண்மை என்ன என்பது மட்டும் புரியாத புதிரகவே உள்ளது. சரி செயற்கையாக வைரசை உருவாக்குவதால் என்ன லாபம் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி பலருக்கு எழுந்திருக்கும். அதற்கான பதில் இந்த படத்தில் ஒளிந்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான ஹாப்ஸ் அண்ட் ஷா படம் தான் அது.

ஹாப்ஸ் அண்ட் ஷா

பாஸ்ட் அண்ட் பியூரியர்ஸ் பட சீரிஸில் வெளியான கடைசி பாகத்தில் ஷா ஹீரோவாக காட்டப்பட்டார். ஹாப்ஸ் ஆக டேன் ஜான்சனும்(Dwayne Johnson), ஷாவாக ஜாசன் ஸ்தாதனும்(Jason Statham) நடித்திருந்தனர். இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். சண்டை காட்சிகள் எல்லாம் வாவ் ரகம். இவர்களே தயாரித்து நடித்த இந்த ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் மூலக் கதையே வைரஸ் தான்.

விஞ்ஞானி ஒருவர் உலகையே அழிக்கும் வைரசை வில்லன்களின் ஆணைப்படி உருவாக்குகிறார். அந்த வைரசை சிஐஏ ஏஜெண்டான ஷாவின் தங்கை கைப்பற்ற முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக அந்த வைரஸ் கேப்சியூஸ்களை அவர் உடலில் செலுத்திக் கொள்கிறார். அதன் பின் இந்த வழக்கில் ஷாவின் தங்கையை குற்றவாளியாக வில்லன் சித்தரித்துவிட்டதால் அதிகாரிகள் அவரை தேடுகிறார்கள். அவர் தான் நாயகி வெனிசா கிர்பை(Vanessa Kirby).


இவர் ஷாவின் தங்கையும் கூட. இந்த வழக்கு வழக்கம் போல சிறந்த ஏஜெண்டுகளான ஹாப்ஸ் அண்ட் ஷாவிடமே வருகிறது. அதன்பின் அவர்கள் அந்த வில்லன்களிடமிருந்து நாயகியை காப்பாற்றுவது தான் மீதிக் கதை. ஒவ்வொரு சண்டை காட்சிகளும் அனல் பறக்கும். நாயகியையும் குறைத்து எடை போட முடியாது. 

நாயகர்களுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருப்பார். 200 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் 760 மில்லியன் வசூல் செய்தது. கடந்த ஆண்டு ஜூலை தான் படம் வெளியானது. இந்த படத்தில் வைரஸ் தான் முக்கிய வில்லன்.


வைரஸ்

செயற்கையாக உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் வைரசை பரப்புவது தான் வில்லன்களின் திட்டம். இதன் மூலம் பலவீனமானவர்கள், உடல்நலன் சரியில்லாதவர்கள் எல்லாம் மரணித்து விடுவார்கள். அதன்பின் ஆரோக்கியமானவர்களும், பலமானவர்களும் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்


. அவர்களை எல்லாம் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுவதே வில்லனின் திட்டம். வில்லன் ஒரு கம்ப்யூட்டர் தான். அது ஒரு வில்லனை உருவாக்கி நாயகர்களுடன் மோத தூண்டுகிறது. ஏற்கனவே உயிரிழந்த வில்லனை தனது தொழில்நுட்ப உதவியால் மனிதனை விட பலமடங்கு சக்தி கொண்டவனாக மாற்றி அவனை தன் வேலைகளுக்கு உதவி செய்ய வைத்துக் கொள்கிறது.

இந்த வைரஸ் பரவுவதால் உயிர் பிழைக்கும் நபர்களை வைத்து எதிர்கால மனிதர்களை உருவாக்குவதே லட்சியமாக காட்டப்பட்டிருக்கும். வழக்கம் போல கிளைமேக்ஸ் காட்சியில் நாயகர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

 வைரஸ் வைத்து தான் முழு கதையும். எது எப்படியோ கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நிச்சயம் இந்த உலகம் விரைவில் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு

No comments:

Post a Comment