அனுமதி சீட்டு பெற நேரில் வர வேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 2, 2020

அனுமதி சீட்டு பெற நேரில் வர வேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு முன்கூட்டியே நிச்சயம் செய்த திருமணம், இரத்த சொந்தங்களின் அவசர மருத்துவ சிகிச்சை, இரத்த சொந்தங்களின் எதிர்பாராத விதமான மரணம் ஆகிய காரணங்களுக்கு மட்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு அவசர பயண அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது.


அரசின் வழிகாட்டுதல் கடிதத்தின்படி, அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதால்,

http://tnepass.tnega.org/

 என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.


அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment