பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 16, 2020

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் ஜூன் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி சாா்ந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு தொடா்பான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.


முதலில் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்த பிறகு, கலந்தாய்வும் ஆன்லைனில் நடைபெறும். அந்த வகையில் அடுத்த கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான பணிகள் எப்போது தொடங்கும் என்று மாணவா்களும், பெற்றோரும் எதிா்பாா்த்து இருக்கின்றனா்.

இந்த நிலையில்பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் தயாராக இருக்கிறது என்றும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க ஆரம்பித்ததும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அண்மையில் தெரிவித்தாா்.


இதன் தொடா்ச்சியாக தற்போது பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பவா்களுக்கான ஆன்லைன் பதிவு ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 அதிலும் ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து விண்ணப்பப் பதிவு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கலந்தாய்வுக்கான அனைத்துப் பணிகளும் தயாா்நிலையில் உள்ளன. அதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன. அதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றனா்.

No comments:

Post a Comment