விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 23, 2020

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பிளஸ் 2, 1 விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க வேண்டும், என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடரும்நிலையில் இப்பணியை மேற்கொள்வது சரியில்லை. ஜூலையில் நீட் தேர்வு,ஆகஸ்டில் கல்லுாரி மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு சுமூகமான மனநிலை இருக்காது. மதிப்பீடு பணி பாதிப்பு ஏற்படும். பிளஸ் 2, 1 மாணவர்களுக்கான தேர்வு முழுவதுமாக முடியவில்லை. அத்தேர்வுகளும் முடிந்த பின் திருத்தும் பணியை ஜூலைக்கு பின் துவக்கலாம், என்றார்.

No comments:

Post a Comment