வெங்காயத்தை வெச்சு எப்படி உடம்பு கொழுப்பை குறைக்கலாம்? - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 24, 2020

வெங்காயத்தை வெச்சு எப்படி உடம்பு கொழுப்பை குறைக்கலாம்?

இன்று இருக்கும் உணவு முறை பழக்கத்தில் பலருக்கும் கொலஸ்ட்ரால் என்பது சகஜமான நோய் ஆகிவிட்டது. கொலஸ்ட்ரால் அதிகமானால் பல விதமான உடல் உபாதைகளும் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எனவே கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. வெங்காயம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். அது உண்மையா? அதைப்பற்றி தற்பொழுது பார்க்கலாம்.உடலில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலின் அளவு என்பது பல விதமான உடல் உபாதைகளுக்கும் காரணமாக அமைகிறது. இருதயம் சம்பந்தப்பட்ட பலவிதமான நோய்களுக்கு இது வித்திடுகிறது. 


கொலஸ்ட்ரால் அர்திட்ஸ் என்ற ஒரு சுவரை எழுப்புகிறது. இது மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆர்டிஸ் என்பது உடலில் வரக்கூடிய ஆக்ஸிஜனின் அளவை குறைக்கிறது. எனவே ஆக்சிஜன் அளவு ரத்தத்தில் குறைவதால் இருதயத்தில் பலவிதமான நோய்கள் நம்மை தாக்குகிறது. 

இதயம் மட்டுமில்லாமல் உடலில் உள்ள பலவிதமான உறுப்புகளுக்கும் இது சேதத்தை ஏற்படுத்துகிறது. அதிகமான கொலஸ்ட்ரால் நம் உடலுக்குள் இருந்தால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு காரணமாக அமைகிறது.


 ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் நல்ல வாழ்க்கை முறை கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பலவிதமான ஆரோக்கியமான உணவுகளில் இயற்கையாகவே கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. அதில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயம் நம் அனைத்து உணவு முறைகளிலும் எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு உணவாக இருக்கிறது. இது நம் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.


பலவிதமான ஆராய்ச்சிகளின் படி, வெங்காயம், கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். வெங்காயத்தில் அதிகப்படியான பாலிபினோலிக் காரணி நிறைந்து இருக்கிறது என்று கூறுகின்றனர்.


 இது நம் இருதயம் வேகமாக இயங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் இதில் anti-inflammatory என்கிற காரணிகளும் அதிகமாக இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன்ட்டி கேன்சர் சத்துகள். போன்றவை நிறைந்து காணப்படுகிறது. 


பலவிதமான ஆய்வின் முடிவுகளில் வெங்காயம் என்பது குறைந்த எல்டிஎல் உள்ளதாக கூறுகின்றனர். எல்டிஎல் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் என்று அறியப்படுகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதே பலவிதமான இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வித்தாக அமைகிறது.


மேலும் வெங்காயம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நல்ல மருந்து போல் அமைகிறது. இதில் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இதன் எண்ணிக்கை 10 ஆக காணப்படுகிறது. மேலும் இதில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது. வெங்காயம் உங்கள் ஒட்டுமொத்த இதய சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. தினமும் நமது உணவில் வெங்காயத்தைத் எடுத்துக்கொள்வது செரிமானத் தன்மையை சீராகும் என்று கூறுகின்றனர். 


மேலும் வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் காரணிகள் நம் உடலில் உள்ள பல விதமான பாக்டீரியா போன்ற தீமை விளைவிக்கக் கூடிய காரணிகள் இடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.


வெங்காயத்தை பச்சையாகவும் பல பேர் விரும்பி சாப்பிடுவார்கள். வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நன்மை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. அதிகமான உணவு சாப்பிட்டு விட்டு ஒரே ஒரு வெங்காயத்தை பச்சையாக நறுக்கி சாப்பிடும் பொழுது உணவு சீக்கிரமாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் நமது மதிய உணவு மாலை உணவு போன்றவற்றிலும் வெங்காயம் சேர்த்து கொள்வது பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது.

No comments:

Post a Comment