சொந்த ஊர் செல்ல அனுமதி; கட்டுப்பாட்டு அறை திறப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 6, 2020

சொந்த ஊர் செல்ல அனுமதி; கட்டுப்பாட்டு அறை திறப்பு




 சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு, அனுமதி சீட்டு வழங்குவதற்காக, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில், இதுவரை திருமணம், இறப்பு, அவசர மருத்துவ உதவி போன்ற, மூன்று காரணங்களுக்காக மட்டும், வெளியூர் செல்ல விரும்புவோர்,






என்ற, இணையதளத்தில் விண்ணப்பித்து, அனுமதி சீட்டு பெற்று வந்தனர்.

தற்போது, அதே இணையதளத்தில், இம்மூன்று காரணங்களை தவிர்த்து, மற்றவர்களும் வெளியூர் செல்ல விரும்பினால் விண்ணப்பித்து, அனுமதி சீட்டு பெறலாம் என, அரசு அறிவித்துள்ளது. 


ஆனால், அனுமதி சீட்டு இல்லாமல், யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல, அனுமதி சீட்டு பெற்றாலும், அவர்கள் செல்லும் இடத்தில் தனிமைப் படுத்தப்படுவர்.





அனுமதி சீட்டு வழங்குவதற்காக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை பணிக்கு, ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலர், பிங்கி ஜோவல்; அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் பொது மேலாளர், ஆனந்தகுமார்; 'பைபர் நெட்' கார்ப்பரேஷன் பொது மேலாளர், சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment