ஓய்வு வயதை உயர்த்த கல்லூரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 12, 2020

ஓய்வு வயதை உயர்த்த கல்லூரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மறுநியமனத்தில் பணியாற்றி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கும், ஓய்வு வயதை உயர்த்த, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து அரசு நிதியுதவி கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சங்கர சுப்பிரமணியன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை, 58ல் இருந்து, 59 ஆக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், மே, 31 வரை பணியில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2019~20ம் கல்வி ஆண்டின் இடையில் மறு நியமனம் பெற்று வரும், 31 வரை, 50 வயது நிரம்பாமல் ஓய்வு பெறுபவர்களுக்கும், அரசாணை பொருந்தும் என அறிவிக்க வேண்டும். வயது ஓய்வு முறை மற்றும் மறு நியமனம் பெற்றவர்கள் வரும், 31ல் ஓய்வு பெறும் நிலையில், ஒரு சாராருக்கு இச்சலுகையை மறுப்பது நியாயமில்லை. கல்லூரிகளில் மறு நியமனத்தில் பணியாற்றி வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால், அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படாது. 

எனவே, மறு நியமனத்தில் பணியாற்றி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு வயதை, 59 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment