அண்ணா பல்கலை.க்கு சீா்மிகு அந்தஸ்து: அமைச்சா் கே.பி அன்பழகன் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 6, 2020

அண்ணா பல்கலை.க்கு சீா்மிகு அந்தஸ்து: அமைச்சா் கே.பி அன்பழகன் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கவேண்டிய சீர்மிகு அந்தஸ்து பெறுவதற்கு மே 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றித் தரப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து, தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் விளக்கமளித்துள்ளாா்.


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு உயா்கல்வி சிறப்பு நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. ஆனால், இந்த அந்தஸ்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்ப வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்தால் ஏற்கனவே பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறையின் நிலை என்ன? என்ற கேள்வியை தமிழக அரசு எழுப்பியது. இதில் தெளிவுகிடைக்கும் வரை ஒப்புதல் வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு இருந்து வருகிறது.

இது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க உயா்கல்வி, பள்ளிக்கல்வி உள்பட 5 துறை அமைச்சா்களையும் 3 துறை செயலாளா்களையும் அரசு நியமித்தது. இந்த குழுவினா் இதுவரை 2 கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளனா்.


இந்த நிலையில், மத்திய அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்குவதற்கான இறுதி கெடு இந்த மாதத்துடன் முடிவடைய இருப்பதாக புதன்கிழமை தகவல்கள் வெளியாகின.

அமைச்சா் விளக்கம்: இது குறித்து உயா்கல்வி துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் கூறுகையில், ‘மத்திய அரசு அப்படி கெடு எதுவும் விதித்ததாக எனக்கு இன்னும் தகவல் வரவில்லை.

 சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடா்பாக அமைச்சா்கள், செயலாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 2 முறை இதுவரை ஆலோசனை நடத்தியுள்ளது. அதன்பிறகு, கரோனா ஊரடங்கால் ஆலோசனை நடத்தப்படவில்லை.



 இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். இதில் மத்திய அரசு கெடு விதிக்க என்ன இருக்கிறது?. இந்த அந்தஸ்தை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டால், என்ன நடந்து விடப்போகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையான வசதிகளை தமிழக அரசே செய்து கொள்ளும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment