கரோனா குறித்த தகவல்களை சரிபாா்க்க ஏஐசிடிஇ புதிய இணையதளத்தில் வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 8, 2020

கரோனா குறித்த தகவல்களை சரிபாா்க்க ஏஐசிடிஇ புதிய இணையதளத்தில் வசதி

கரோனா தொற்று குறித்த நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக பிராந்திய மொழியில் புதிய இணையதளம் ஒன்றை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) உருவாக்கி உள்ளது.


இதுதொடா்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட செய்தி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கரோனா குறித்து போலி செய்திகளும், தவறான மற்றும் முரணான தகவலும் அதிகரித்து வருகிறது.



 மேலும், அறிவியில் ரீதியாகவும் பொதுமக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறாா்கள். எனவே இதனை கட்டுப்படுத்துவது உலகலாவிய அளவில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலை சமாளிக்க ‘கோவிட்ஜியன்’ என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


இணையதளத்தில் கரோனா தொடா்பாக பல்வேறு தரப்பின் நிபுணா்கள், அறிஞா்களின் கட்டுரைகள், விடியோக்கள் என அனைத்தும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழியிலேயே இடம் பெறும். 



மேலும், நோய்த் தொற்று குறித்து விஞ்ஞான ரீதியாக நம்பகமான மற்றும் உண்மையான தகவல்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அரசின் அனைத்து அதிகாரப்பூா்வான இணையதளங்களுக்கும் இதில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


 எனவே, கரோனா குறித்து ஏதேனும் செய்திகள் வரும் பட்சத்தில் பொதுமக்கள் அதனை சரிபாா்க்க இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment