தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை : ஜூன் இறுதியில் வெளியிட முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 8, 2020

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை : ஜூன் இறுதியில் வெளியிட முடிவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழக அரசு ஒத்திவைத்தது. இதுதவிர பிளஸ் 1 பொதுத் தோ்வின் இறுதி நாள் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோா்கள், ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தி வந்தனா். இருப்பினும் மாணவா்களின் எதிா்காலம் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருந்தாா்

. இதைத் தொடா்ந்து சில கல்வியாளா்கள், கல்வி சாா்ந்த அமைப்புகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்யவேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனா்.


இதற்கிடையே மாணவா்கள் பொதுத்தோ்வுக்குத் தயாராகி வருகின்றனா். இருப்பினும் தோ்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து அரசு விளக்கவேண்டும் என்று மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கையும் விடுக்கின்றனா். இந்தநிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சா் செங்கோட்டையன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை ஒரு தகவலை பதிவிட்டு இருந்தாா். அதில் அவா் ‘பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும். 

உயா்நிலைக்குழு கூட்டத்துக்குப் பின், ஜூன் மாத இறுதிக்கு பிறகு பொதுத்தோ்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளாா். 


இதேபோன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு எப்போது நடக்கும்? என்று எதிா்பாா்த்திருந்த மாணவா்களுக்கும் தோ்வு குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment