மாணவர்களின் அறிவியல் திறன் வெளிப்படுத்த கிடைத்தது வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 5, 2020

மாணவர்களின் அறிவியல் திறன் வெளிப்படுத்த கிடைத்தது வாய்ப்பு

பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்த, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது



.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் அறிவியல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இதன் அடிப்படையில் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன. அறிவியல் திறன்களை வெளிப்படுத்த, அவரவர் தாய்மொழியின் மூலம் செயல்பாடுகளை பதிவு செய்வதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டன. 


இதை மையமாகக் கொண்டு அறிவியல் பலகை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள், தங்களின் அறிவியல் செயல்பாடுகளை தமிழ் மொழியிலும், வெளிப்படுத்த, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




இதற்கான கூடுதல் தகவல்களை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை, 99424 67764 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். 

No comments:

Post a Comment