ஆன்லைன் இன்டர்ன்ஷிப்' யு.ஜி.சி., அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 6, 2020

ஆன்லைன் இன்டர்ன்ஷிப்' யு.ஜி.சி., அனுமதி

பட்டப்படிப்பு மாணவர்கள், 'இன்டர்ன்ஷிப்' என்ற களப் பயிற்சியை, 'ஆன்லைனில்' மேற்கொள்ள, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்து உள்ளது.



கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்வி முறையில், பல்வேறு மாற்றங்களை, மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.


 தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், மாணவர்கள் களப் பயிற்சிக்காக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வழி களப் பயிற்சிக்கு அனுமதி அளித்து, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழு ஒப்புதல் தந்துள்ளது. 



'இன்டர்ன்ஷிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை குறைத்து கொள்ளலாம்; தாமதமாகவும்மேற்கொள்ளலாம்' என்ற, ஆலோசனைகளையும், யு.ஜி.சி., வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment