சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரான ஜோயல் பெட்ரிசியன் பானை ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
இதற்காக மண் பானைகளில் வண்ண வண்ண விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்
. ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பதன் அவசியம், முகக்கவசங்கள் அணிவதன் அவசியம், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவம் போன்றவற்றை பானைகளில் ஓவியங்கள் வரைந்து விளக்கியுள்ளார்.
ஒரு பானையில் ஓவியம் வரைவதற்கு அரைநாள் தேவைப்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவியத்திற்காக பானையைத் தேர்ந்தெடுத்தாகவும் கூறும் ஓவியர், தன் ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்க விரும்புவதாகக் கூறுகின்றார்.
மூங்கில் இலை, சிறிய குண்டு பல்பு உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரைந்து தன்னுடைய திறனை அவர் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment