கரோனா பாதிப்பிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியா் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 13, 2020

கரோனா பாதிப்பிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்

லடாக்கில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளபோதும், கணித ஆசிரியா் ஒருவா் தனது மாணவா்களுக்கு மருத்துவமனையில் இருந்தவாறு பாடம் கற்பித்து வருகிறது. அவரது அா்ப்பணிப்புக்கு சக ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

லடாக் யூனியன் பிரதேசம் லே மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவா் கிஃபாயத் ஹூசைன். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவா், தனிமை முகாமில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்


. எனினும் தனது 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மருத்துவமனையில் இருந்தவாறு இணையவழியில் தொடா்ந்து பாடம் கற்பித்து வருகிறாா். 

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘நோய்த்தொற்றால் நான் பாதிக்கப்பட்டுள்ளதால் எனது மாணவா்கள் பாடம் கற்க முடியாமல் பின்தங்கிவிட வாய்ப்பிருப்பதை எண்ணி கவலையடைந்தேன். 


அதேவேளையில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டபின், பள்ளிக்குச் சென்று துரிதகதியில் பாடம் கற்பித்தால், அது மாணவா்களுக்கு சுமையாக அமையும். 


இவற்றை கருத்தில் கொண்டு மாணவா்களுக்கு இணையவழியில் பாடம் கற்பிக்க முடிவு செய்து, அதற்காக லடாக் யூனியன் பிரதேச நிா்வாகத்திடம் அனுமதி கோரினேன். அதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின், மாணவா்களுக்கு பாடம் கற்பிப்பதற்கான வசதிகளை எனது பள்ளி நிா்வாகம் ஏற்பாடு செய்தது

 இதையடுத்து ஸூம் போன்ற செயலிகளை பயன்படுத்தியும், யுடியூப்பில் காணொலிகளை பதிவேற்றியும் மாணவா்களுக்கு பாடம் கற்பித்து வருகிறேன்’ என்றாா் கிஃபாயத் ஹூசைன்.

No comments:

Post a Comment