வாட்ஸ் அப் நிறுவன செயலிக்கு தடைவிதிக்க வேண்டும்" - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 14, 2020

வாட்ஸ் அப் நிறுவன செயலிக்கு தடைவிதிக்க வேண்டும்"

வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் செலுத்தும் முறைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொண்டு நிறுவனமான குட் கவர்னன்ஸ் சேம்பர்ஸ் தாக்கல் செய்த மனுவில், "வாட்ஸ்அப் பேமென்ட்" என்ற செயலி மூலம் பணம் செலுத்தும் முறையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்றும், ஆனால் செயலிக்கு ரிசர்வ் வங்கி இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்படப்பட்டுள்ளது.


 எனவே அச்செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தபோது, ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கும் வரை பணபரிவர்த்தனையை செயல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப்  உத்தரவாதம் அளித்தது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.


 மேலும், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும், வாட்ஸ்அப் பண பரிவர்த்தனை செயலிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கி முடிவெடுக்க எந்த தடையும் இல்லை என்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்

No comments:

Post a Comment