இந்து தமிழ் திசை' நடத்தும் மாணவர்களுக்கான வானியல் முகாம்: இணையத்தில் நாளை தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 5, 2020

இந்து தமிழ் திசை' நடத்தும் மாணவர்களுக்கான வானியல் முகாம்: இணையத்தில் நாளை தொடக்கம்

இந்து தமிழ் திசை' நாளிதழ், ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்புடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 3 நாள் வானியல் முகாமை நடத்துகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்காக 'இந்து தமிழ் திசை' நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்சயின்ஸ் லேர்னிங் கிளப்புடன்இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 3 நாள் வானியல் முகாமை 'இந்து தமிழ் திசை' நடத்த உள்ளது.

இந்த வானியல் முகாமில் 4-ம்வகுப்பு முதல் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். மே 6-ம் தேதி புதன்கிழமை (நாளை)தொடங்கும் இந்த முகாம் 8-ம் தேதிவரை 3 நாட்கள் நடக்க உள்ளது. மேற்கண்ட 3 நாட்களும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் இந்த முகாம் நடைபெறும். இதில் பங்கேற்க செல்போன் இருந்தாலே போதுமானது.

வானியல் தொடர்பான தகவல்கள், வானியல் ஆராய்ச்சிகள் பற்றிய இந்த முகாமை ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப் நிறுவனர் வினோத்குமார் நடத்துகிறார். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.249/- செலுத்த வேண்டும்.


 https://connect.hindutamil.in/Astronomy.php 

என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment