குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 1, 2020

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்

குழந்தைகள் வீட்டில் ஏதாவது கொறிக்க வேண்டும் என கேட்டு அடம்பிடித்தால் இந்த ring முறுக்கு செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவார்கள். எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்

மிளகாய் தூள் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/2 tsp

சீரகம் - 1 tsp

மிளகு - 1 tsp

எண்ணெய் - 2 tsp

எண்ணெய் - வறுக்க தே . அளவு

உப்பு - தே . அளவு

செய்முறை :

கடாய் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விடுங்கள்.

அடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், மிளகு ( இடித்து போடவும்) உப்பு என சேர்த்து தண்ணீரை சூடாக்குங்கள்.

ஒரு கொதி வந்ததும் அதில் அரிசி மாவை சேர்த்து கிளறுங்கள். கட்டிகளாக இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பின் மாவு சப்பாத்திக்கு பிசையும் பதத்தில் இருக்க வேண்டும். கிளறியதும் ஆற விடுங்கள். ஆறியதும் கைகளால் பிசைந்துகொள்ளுங்கள். பின் ஈரத்துணி போட்டு மூடி அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

ஊறியதும் மாவை கைகளில் நீள வாக்கில் சுருட்டுங்கள். பின் வட்டமாக மடித்து முணைகளை மூடிவிடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக வட்டமாக சுருட்டிக்கொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இந்த முறுக்கை போட்டு வறுத்து எடுங்கள். பொன்னிறமாக வரும்போது எடுங்கள்.

அவ்வளவுதான் இப்படி ஒவ்வொன்றாக போட்டு எடுக்க ரிங் முறுக்கு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போர் அடித்தால் சாப்பிடலாம்

No comments:

Post a Comment