பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 17, 2020

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது: கொரோனா தொற்றுள்ள பகுதிகளில், அரசு பள்ளிகள் இருந்தால், அங்கும், பத்தாம் வகுப்பு தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும்

. தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்கள், எந்த அச்சமுமின்றி வந்து செல்ல, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பக்கத்து மாநிலம் சென்றுள்ள மாணவர்கள், தேர்வெழுத வசதியாக, 'இ ~ பாஸ்' பெற, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



வெளிமாவட்டத்தில் இருந்து தேர்வெழுத வரும் மாணவருடன், அவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் என ஒருவருக்கு, அனுமதி பாஸ் வழங்கப்படும். தேர்வெழுத தயாராக உள்ள மாணவர்கள், தற்போது எங்குள்ளனர் என்ற விபரத்தை, பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

விபரங்கள் கிடைத்ததும், முதல்வருடன் பேசி, தெளிவான விபரம் இன்று அறிவிக்கப்படும். சூழ்நிலை காரணமாக, தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்துவது குறித்து, தேவையிருப்பின் அரசு பரிசீலனை செய்யும்.


 மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, கல்வி சேனல் வாயிலாக, பொதுத்தேர்வு குறித்த அட்டவணை அறிவிக்கப்படும். இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment