ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க சலுகை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 20, 2020

ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க சலுகை

வெளிநாட்டில் படிக்க செல்வதை, மாணவர்கள் கைவிட்டுள்ளதால், அவர்கள், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடித்து வெளிநாடுகளில் படிக்க திட்டமிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், தற்போது கொரோனா பிரச்னையால், முடிவை மாற்றியுள்ளனர். இந்தியாவில், அவரவர் மாநிலங்களிலேயே படிக்க முடிவு செய்துள்ளனர்.இந்த மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்காக, ஜே.இ.இ., நுழைவு தேர்வு எழுத முயற்சித்து வருகின்றனர். கால அவகாசம் முடிந்ததால், அவர்களால், விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.இதையேற்ற மத்திய அரசு, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.அதன்படி, வரும், 24ம் தேதி வரை, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; மாலை, 5:00 மணி வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்; இரவு, 11:30 மணி வரை, தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment