மேலாண்மை பட்டய படிப்பில், மாணவர்களை சேர்க்கவும், கட்டணம் வசூலிக்கவும், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு:
ஒவ்வொரு தொழில்நுட்ப கல்லுாரியும், கொரோனா தொடர்பான அரசின் நிபந்தனைகளின்படி செயல்பட வேண்டும். மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, அரசு அனுமதிக்கும் காலத்தில் நடத்தலாம்.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, இன்னும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வில்லை. எனவே, பட்டப் படிப்பு மாணவர்களை, 'டிப்ளமா' மேலாண்மை படிப்புக்கு சேர்க்கும் போது, 2020 டிசம்பர், 31க்குள் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று விடுவதாக, உறுதிமொழி பெற்ற பின் சேர்க்கலாம்.
இந்த காலகட்டத்துக்குள் முடிக்காவிட்டால், டிப்ளமா படிப்பை தொடர முடியாது. மாணவர்களிடம், அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, முன்கூட்டியே செலுத்த கட்டாயப்படுத்த கூடாது; கட்டணத்தை உயர்த்தவும் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment