ஊரடங்கு முடியும் வரை கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது: இன்ஜி. கல்லூரிகளுக்கு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 15, 2020

ஊரடங்கு முடியும் வரை கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது: இன்ஜி. கல்லூரிகளுக்கு உத்தரவு

ஊரடங்கு முறையும் வரையில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்கக் கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு உத்தரவிட்டுள்ளது.


 பொது முடக்கம் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பல தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்று குற்றச்சாட்டு அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவுக்கு தெரிய வந்தது. 


இதையடுத்து, அதன் தலைவர் அனில் சகஸ்ரபுதே தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிலநுட்ப கல்லூரிகளுக்கு எழுதிய கடித‍த்தில் கூறப்பட்டுள்ளதாவது:


பல தனியார் பொறியில் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் கிடைத்துள்ளது. 

கொரோனா தொற்று தேசிய பேரிடர் என்பதால் ஆசிரியர்களின் குடும்பங்கள் மன அழுத்ததுக்கும் பட்டினிக்கும் ஆளாக கூடாது என்பதால் அவர்களுக்கு முறையாக சம்பளத்தை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனை கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதே போல், சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. ஆனால், நோய் தொற்று முடிவடைந்து இயல்புநிலை திரும்பியதும் கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment