கொரோனா வைரஸை எதிர்கொள்வது மிக சுலபம்! - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 25, 2020

கொரோனா வைரஸை எதிர்கொள்வது மிக சுலபம்!


பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள், பல செல்களால் ஆனது. ஆனால், வைரஸ், தான் சார்ந்த உயிரின் நுண்ணுயிரிகளை போன்று, தனக்கு தேவையான சக்தியையும், புரதத்தையும் தானே உருவாக்கி கொள்ள இயலாது.வைரஸ் என்பது, பல உடல் பிரச்னைகளை உண்டாக்கும், மரபணுக்களை மட்டும் பாதுகாத்து வைத்துள்ள, பழமையான உயிரினம்.


எதிர்ப்பு சக்தி

முறையான ஒரு செல் அடுக்கு கூட, இதற்கு கிடையாது. மரபணுக்களை சுற்றிலும், 'சைட்டோபிளாசம்' எனப்படும், ஜெல் போன்ற கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆன, சுவர் உள்ளது.

அதனால் தான், நாம் சோப்பு போட்டு கழுவியதும், இந்த அடுக்கு உடைந்து, வைரஸ் அழிந்து விடுகிறது. வைரசை எதிர்கொள்வது மிகவும் சுலபம்.புற சூழலையும், நம்மையும் சுத்தமாக வைத்துக் கொண்டால், இது இருக்காது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால், நம் உள்ளேயும் வைரஸ் நுழையாது. 


தன்னை வளர்த்து கொள்வதற்காகவே, ஒரு உயிரினத்தை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிலும், வைரஸ் நுழைந்தால், சம்பந்தப் பட்டவரின் நோய் எதிர்ப்பு அணுக்கள், தன்னை கண்டுபிடித்து விடவும் கூடாது. 

அதனால், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் உடலினுல் சென்றால் மட்டுமே, அவரின் செல்லின் உள்ளே ஒளிந்து கொண்டு, பல்கி பெருக முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஐந்து விஷயங்களை சொல்கிறேன்.

வாய், மூக்கு


வாய், மூக்கு இரண்டையும் மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையில் எழுந்து, பல் துலக்குவது போல, இரவு துாங்க போவதற்கு முன்பும் செய்வது அவசியம். 

இனிப்பு வகைகள் சாப்பிட்டதும் பல் துலக்கி, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதும் முக்கியம். காரணம், வைரஸ் போன்ற உயிரினம் வளர்வதற்கு அவசியமான எரிபொருள், இனிப்பு. எந்த இடத்திலாவது, சர்க்கரை படிந்து இருந்தால், வைரஸ் அங்கு வளர ஆரம்பித்து விடும். 


சர்க்கரை கோளாறு இருப்பவர்கள், உணவின் வழியே சென்ற சர்க்கரை வயிற்றில் இருந்து, அங்கு ஏற்கனவே வைரசும் இருந்தால், இந்த சர்க்கரையை பயன்படுத்தி, வளரத் துவங்கி விடும். ரத்த சர்க்கரை அளவை, உடனடியாக அதிகப்படுத்தும், எந்த உணவையும் தவிர்ப்பது நல்லது. 

அதேபோல, மூக்கையும் உப்பு நீரால் கழுவலாம். 'ஹைட்ரஜன் பெராக்சைடு' அமிலம் ஒரு பங்கு, தண்ணீர் ஐந்து பங்கு என்ற அளவில் கலந்து, வாய் கொப்பளிக்கலாம்; மூக்கையும் கழுவலாம். கவனம், நேரடியாக பயன்படுத்தக் கூடாது; நீரில் கலப்பது மிக முக்கியம்.

வயிறு

வாய், மூக்கு வழியே செல்லும் வைரஸ், தொண்டையில் தங்கி, நேரடியாக வயிற்றுக்கு செல்லும். முதல் இரண்டு நாட்கள் இங்கு தான் இருக்கும்.

 அதை எதிர்க்கும் சக்தி, ஜீரண மண்டலத்திற்கு அவசியம்.'புரோபயாடிக்' எனப்படும், நன்மை செய்யும் பாக்டீரியா, அதிக அளவில் வயிற்றில் இருக்க வேண்டும். வீட்டிலேயே உறைய வைத்த தயிர், தோசை, இட்லி மாவு போன்ற, நல்ல பாக்டீரியா அதிகம் உள்ள உணவு அவசியம்; அதிக மசாலா, எண்ணெய் தவிர்த்து விடவும்.

தண்ணீர்

நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். நீர்ச் சத்து போதுமான அளவு இருந்தால், உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தோல், மெல்லிய மியுக்கஸ் சவ்வு ஈரப்பதமாக இருப்பதுடன், உடலின் உள் பகுதியில், நுண்ணிய கீறல்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்; இதனால், வைரஸ் உள்ளே செல்வது தவிர்க்கப்படும்.

வைட்டமின்

'வைட்டமின் - சி' அதிகம் எடுத்துக் கொண்டால், வைரஸ் பரவுவதை நேரடியாக தடுக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா இவற்றில் உள்ளது

.வைட்டமின் - டி பல விதங்களிலும் உடலுக்கு தேவை என்றாலும், செல்களின் உள்ளே சென்று, வைரஸ் ஒட்டிக் கொள்வதை, இது தடுக்கும். வைரஸ், நம் உடலினுள் சென்றவுடன், பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு இடம் வேண்டும்; 

அது தான் செல்கள். உடலின் ஒவ்வொரு உறுப்பிலும், செல்கள் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். இந்த கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் உள்ள, செல்களில் ஒட்டிக் கொள்கிறது.வைரஸ் ஒட்டிக் கொள்ள உதவும் செல்களுக்கு, 'ஏஸ் ரிசெப்டார்' அதாவது, ஏற்பி என்று பெயர். வைட்டமின் டி அதிகம் இருந்தால், செல்களின் மேல் படிந்து, வைரஸ் ஒட்டுவதை தடுத்து விடும்.'ஜிங்க்' தாது மிக அவசியம். டாக்டரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி செய்வதால், எலும்பு மஜ்ஜை துாண்டப்படும். இதிலிருந்தே, ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகிறது. தசைகளை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சி தேவை.

தசைகள் முழுமையாக வேலை செய்வதால், உடலின் சக்தி அதிக அளவில் செலவாகிறது. இதனால், உடலில் உள்ள கூடுதல் குளுக்கோஸ் சக்தியாக வெளிப்பட்டு, வைரஸ் வளர தேவையான கூடுதல் சர்க்கரை சேருவதை தடுக்கும்.

யோகா நுரையீரலில் உள்ள, 'அல்வியோலா' எனப்படும், சிறிய காற்று பைகளை, வைரஸ் தாக்குகிறது. ஆசனங்கள், சுவாச பயிற்சிகள் செய்வதால், இயற்கையாகவே நுரையீரல், மார்பு பகுதி வலிமை பெற்று, வைரஸ் தொடரிலிருந்து பாதுகாக்கும்.

மஞ்சள்

நம்மை தவிர, உலகின் மற்ற நாட்டு மக்களுக்கு, மஞ்சள், இஞ்சி, பூண்டு
 போன்றவை, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் என்பது, புதிய விஷயமாக இருக்கலாம்.


அதிலும், மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப் பொருள், மிக சிறந்த கிருமி நாசினி. இதை, மில்க் ஷேக், ஜூஸ் என்று, எதில் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம்.இவற்றை பின்பற்றினாலே, நம்மை எந்த தொற்றும் தாக்காது.

டாக்டர் சந்தோஷ ஜேக்கப்,
எலும்பு மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மருத்துவர்,
சென்னை.
99404 93666
drsjortho@gmail.com

No comments:

Post a Comment