மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55-நாட்கள் ஆகியுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுக்குள் வராததால், ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது. 


 கொரோனா பரவல் குறைவான இடத்தில் சில தளர்வுகளை விதித்து, வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது என்றும் தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment