பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 13, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்க!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை


பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன். இது தொடா்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருந்தாா். 

ஆனால், தற்போது ஜூன் 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.

கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17-ஆம் தேதிக்குப் பிறகும் பொது முடக்கம் நீடிக்கப்படும் என்று பிரதமா் தெரிவித்து இருக்கிறாா். 


இந்த நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாள்கள் ஆகுமோ என்று தெரியாத சூழலில், பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை நடத்த வேண்டிய தேவை என்ன?

இந்தக் கல்வி ஆண்டில் பொதுத் தோ்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவச் செல்வங்களையும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக வைகோ கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment