ரேஷன் கடைகளில், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இன்று(மே 4) துவங்குகிறது. தேவைப்பட்டால், கூடுதலாக, 5 கிலோ இலவச அரிசியை, ரேஷன் கார்டுதாரர்கள் கேட்டு பெறலாம்.
ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, இம்மாதமும், அரிசி, கோதுமையுடன், சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முன்னுரிமை மற்றும் 'அந்தியோதயா' கார்டுகளுக்கு, ஏப்ரல் முதல் ஜூன் வரை, கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, தலா, 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், முன்னுரிமை, முன்னுரிமையற்ற, முன்னுரிமை அந்தியோதயா என, 2.01 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும், ஏற்கனவே வழங்கப்படும் இலவச அரிசியுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகளில், இன்று துவங்குகிறது.
கடைகளில், கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்'கள் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கூடுதல் ஒதுக்கீட்டின் அடிப்படையில், ஒரு கார்டுதாரருக்கு, இம்மாதம் எவ்வளவு அரிசி வழங்க வேண்டும் என்ற விபரம், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக வழங்கப்படும் அரிசியின் விபரத்தை, அனைத்து ரேஷன் ஊழியர்களும், கார்டுதாரர்களுக்கு முறைப்படி தெரிவிப்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கார்டுதாரர்கள், இன்று முதல், மாநில அரசு வழங்கும் அரிசியுடன், மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசியையும், கடை ஊழியர்களிடம் கேட்டு பெறலாம்.

No comments:
Post a Comment