'தலைமை செயலக ஊழியர்கள் உட்பட, அனைத்து அரசு ஊழியர்களும், இன்று முதல், தங்கள் சொந்த செலவில் அலுவலகம் வர வேண்டும்' என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், அனைத்து துறைகளும், 16ம் தேதி வரை, 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன. அந்த ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல, விழுப்புரம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகங்கள் சார்பில், பஸ் வசதி செய்து தரப்பட்டிருந்தது.
அதற்கான செலவை, அரசே ஏற்றது.இன்று முதல், அரசு அலுவலகங்கள் அனைத்தும், முழுமையாக செயல்பட உள்ளன; ௫௦ சதவீத ஊழியர்கள், சுழற்சி முறையில், பணிக்கு வரவுள்ளனர். அவர்களுக்கான பஸ் வசதி செய்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, அரசு பஸ்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும், பஸ்சுக்கான கட்டணத்தை, ஊழியர்கள் தான் செலுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:இந்த மாதம் இறுதி வரை, ஊரடங்கு தொடர்வதால், அரசு ஊழியர்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்படாத வகையில், அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஊழியர்களை அழைத்து வரும் பஸ்களில், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், இருக்கைகளில் எண்கள் வரையப்பட்டுள்ளன.
பஸ்களுக்கு, நடைக்கு நடை கிருமி நாசினி தெளிக்கப்படும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள், முகக் கவசம், கையுறைகள் அணிவர். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். வாடகைக்கு பஸ்கள் தேவைப்படும் அரசு துறைகள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி கடிதத்துடன், போக்குவரத்து கழக தலைமையகத்தை அணுகலாம்.
மேலும், 'இ~ ~ பாஸ்' வாங்கி பிற மாநிலங்களுக்கு செல்ல தயாராக உள்ள குழுக்களும் எங்களை அணுகலாம். அவர்களையும் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல, தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment