இனி Gmail மூலம் கூகுள் மீட் இலவச வீடியோ கால்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 7, 2020

இனி Gmail மூலம் கூகுள் மீட் இலவச வீடியோ கால்!

கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது சில பயனர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Google Meet அனைத்து பயனர்களுக்கும்

கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை கூகுள் மீட் [Google Meet] அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. குறிப்பாக இந்த வீடியோ அழைப்பு சேவை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றி உள்ளது.


கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம்

இந்த கூகுள் மீட் பயன்பாடு ஆலோசனை கூட்டம் மற்றும் கல்வி சம்பந்தமான அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியம், ஆனாலும் சில மாற்றங்களை செய்ததுடன் இணையத்தில் மற்றும் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் பயன்பாடுகள் வழியாக அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் காலெண்டரைப் பயன்படுத்துபவர்கள்

மேலும் கூகுள் காலெண்டரைப் பயன்படுத்துபவர்கள், அங்கிருந்து எளிதாக தொடங்கவோ அல்லது மற்றவர்களை இணைக்கவோ முடியும் என கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த கூகுள் மீட் மூலம் ஒரு வீடியோ அழைப்பில் 100பேரை பங்கேற்க அனுமதிக்கிறது

ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ்

அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட வணிகக் கருவிகளின் இலவச பதிப்பகளை கூகுள் நீண்டகாலமாக வழங்கியிருந்தாலும், தற்போது தொடங்கப்பட்ட இந்த புதிய சேவையான Google Meet சமமானதாக எதுவும் இல்லை.


கூகுள் மீட் பயன்பாட்டின் இலவச பதிப்பு

கூகுள் மீட் பயன்பாட்டின் இலவச பதிப்பு இந்த மே மாதத்தில் வெளியிடப்படும் என்றும், பிரீமியம் பயனர்களுக்கு முன்னர் கிடைத்த அனைத்து சேவைகளும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை

அதேபோல் கூகிள் மீட் வீடியோ கான்பரன்சிங் சேவை ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Gmail பக்கத்தின் இடது பக்கப்பட்டியில் Google Meet ஐப் பயன்படுத்தி மீட்டிங் தொடங்குவதற்கான ஆப்ஷன் காண்பிக்கப்படுகிறது. இந்த புதிய விருப்பத்தை சில பயனர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

கூகிள் மீட்டின் ஜிமெயில் ஒருங்கிணைப்பு ஒரு சில பயனர்களின் கணக்குகளில் காணப்பட்டதாக தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. ஜி சூட் சந்தாதாரர்களுக்கான இந்த ஒருங்கிணைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகிள் கடந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. 

கூகிளின் ஆதரவு பக்க அறிவிப்பின்படி, பணி சார்ந்த தகவல் மற்றும் பள்ளி வகுப்புகளுக்கான ஜிமெயில் கணக்குகளில் மட்டுமே இப்போது இதை அணுக முடியும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கூகிள் மீட் ஒருங்கிணைப்பின் வெளியீடு

ஜிமெயிலில் இந்த கூகிள் மீட் ஒருங்கிணைப்பின் வெளியீடு தொடங்கியுள்ளதாகவும், சில பயனர்கள் அதை ஏற்கனவே பார்க்க முடிந்தது என்றும் அறிக்கை கூறுகிறது.

 புதிய சந்திப்பு ஒருங்கிணைப்பின் இடது பக்கத்தின் பேனலில் இந்த வசதி காண்பிக்கப்படுகிறது. மேலும் இது பயனர்களுக்கான பயன்பாடுகளில் வீடியோ மீட்டிங்கில் நபர்களை சேர்க்கவும் ஒரு புது மீட்டிங் வசதியையும் தொடங்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது


தனிப்பட்ட URL அல்லது குறியீடு

ஒரு கூட்டத்தைத் தொடங்கு, அதாவது மீட்டிங்கை தொடங்கு என்ற அம்சத்தைக் கிளிக் செய்தவுடன், புதிய சாளரம் திறக்கும். நீங்கள் மீட்டிங்கின் பெயரைத் தேர்வுசெய்தவுடன் தனிப்பட்ட URL அல்லது குறியீட்டை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 

அமைப்பாளரால் வழங்கப்பட்ட குறியீடு அல்லது இணைப்பின் அடிப்படையில் மற்றொரு நபரால் தொடங்கப்பட்ட கூட்டத்தில் நீங்கள் சேரவும் முடியும்.

meet.google.com

கூகிள் மீட் சமீபத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 லட்சம் பயனர்களைச் சேர்ப்பதாக அறிவித்தது. ஜிமெயில் தவிர, இதை Chrome மற்றும் பிற நவீன வகைகள் மூலம் நேரடியாக அணுக முடியும். 

ஒரு கூட்டத்தை தொடங்க நீங்கள் meet.google.com க்கு செல்லலாம். இது இலவச பயனர்களுக்கான சந்திப்பு வரம்பை 60 நிமிடங்கள் வழங்குகிறது. இது ஜூம் ஆப் போலவே திரை பகிர்வையும் ஆதரிக்கிறது.

No comments:

Post a Comment