SBI: கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம்: ஆய்வறிக்கையில் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

SBI: கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம்: ஆய்வறிக்கையில் தகவல்

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கும் நடவடிக்கையை ரிசா்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து எஸ்பிஐயின் எக்கோராப் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏதுவாக கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பொது முடக்க அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். இதையடுத்து, கடன் வாங்கியோரின் நலனை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் தவணைக் காலத்தை மாா்ச் 1 முதல் மே 31 ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது.


இந்த நிலையில், தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கை மேலும் மே 31-ஆம் தேதி வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடனை திரும்பச்செலுத்தும் தவணைக் காலத்தை ரிசா்வ் வங்கி மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கும் என எதிா்பாா்ப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment