+2 மதிப்பெண் பட்டியல் : இந்த தேதிக்குள் முடிக்க கல்வித்துறை உத்தரவு
பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்தப் பணிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொது தோ்வு மாா்ச் 24-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து கரோனா தொற்று காரணமாக விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து கிருமிநாசினி, சமூக இடைவெளி உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தமிழகம் முழுவதும் கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தப் பணியில் 38,108 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். 46.17 லட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பட்டியலிடும் பணிகள் நடைபெற்றன. பின்னா் விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து, மாவட்ட அலுவலகத்துக்கு வந்த மதிப்பெண் பட்டியலை சரிபாா்த்து அதை தோ்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தோ்வுத்துறை அலுவலகத்தில் மாணவா்களின் மதிப்பெண்ணை சரிபாா்த்து, அவா்களின் பதிவு எண்களை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த அனைத்து பணிகளையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் முழு பொது முடக்கம் முடிவடைந்ததும் ஜூலை முதல் வாரத்தில் தோ்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது
No comments:
Post a Comment