ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு செப். 30 வரை நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 9, 2020

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு செப். 30 வரை நீட்டிப்பு


ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு செப். 30 வரை நீட்டிப்பு



ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, நாடு முழுதும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதால், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.


இதனால், வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் முடிந்த நிலையில், அவற்றின் காலக்கெடு ஏற்கனவே ஜூன் 30 வரை வழங்கப்பட்டு, பிறகு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

இந்நிலையில், தற்போது வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம், மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment