4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, June 23, 2020

4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

4 மாவட்டங்களில்  இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு
தர்மபுரி உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி: 

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், லேசானது முதல் மிதமானது வரையிலான, மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று காலை வரை கன மழை பெய்யும்.

தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்சமாக, 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். கடந்த, 24 மணி நேரத்தில், அரக்கோணம், 7; திருத்தணி, 5; திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, 4; திண்டிவனம் மற்றும் தேவாலாவில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில், சூறாவளி காற்று வீசும் என்பதால், இன்று, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment