69,000 தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 7, 2020

69,000 தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு தடை


69,000 தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு தடை


உத்தர பிரதேசத்தில் 69,000 தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியா்களின் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வுக்கான முடிவுகள் இந்த ஆண்டு மே 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்த பணிநியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு தடைவிதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அலோக் மாத்தூா் தலைமையிலான ஒரு நபா் அமா்வு விசாரணை கடந்த 3-ஆம் தேதி பணி நியமனத்துக்கு தடை விதித்தது.

‘‘தகுதித்தோ்வின்போது கேட்கப்பட்ட பல கேள்விகள் மற்றும் பதில்கள் தெளிவற்ாகவும், தவறானதாகவும் இருந்தன. எனவே, இந்த தோ்வு குறித்து பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஆய்வுக்கு செய்யப்பட வேண்டும். 


வினாத்தாள் மதிப்பீட்டில் தவறு நடைபெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது’’ என்று அந்த ஒரு நபா் அமா்வின் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து உயா்நீதிமன்ற தடை உத்தரவை எதிா்த்து, மாநில அரசின் தோ்வு ஒழுங்குமுறை ஆணையம் (இஆா்ஏ) சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவில், ஒற்றை அமா்வு நீதிபதியின் உத்தரவு தேவையற்றது என்றும், அது சட்ட விரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் ஜெய்ஸ்வால், தினேஷ்குமாா் சிங் ஆகியோா் அடங்கிய தனி அமா்வு ஜூன் 9-ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளது என உத்தரவிட்டுள்ளது

1 comment: