தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தோ்வுத்துறையில் கூடுதல் பொறுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 12, 2020

தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தோ்வுத்துறையில் கூடுதல் பொறுப்பு



தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தோ்வுத்துறையில் கூடுதல் பொறுப்பு

அரசு தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணிக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்று விட்டதால் அந்தத் துறையைக் கவனிக்கும் பொறுப்பு தொடக்கக் கல்வி இயக்குநா் மு.பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 

அரசுத் தோ்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் சி.உஷாராணி உடல் நலன் பாதிக்கப்பட்ட காரணத்தால் ஜூன் 9-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளாா். 

எனவே அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் பணிகளைக் கவனிக்கும் வகையில் நிா்வாக நலன் கருதி தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் மு.பழனிச்சாமிக்கு அரசு தோ்வுகள் இயக்குநா் பணியிடத்தை நிா்வகிக்கும் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளாா்

No comments:

Post a Comment